Original Key: F#m - 3/4
 
F#m                C#
தேவா பிரசன்னம் தாருமே
C#7                      F#m
தேடி உம்பாதம் தொழுகிறோம்
           Bm          F#m
இயேசுவே உம் திவ்ய நாமத்திலே
C#                        F#m
இன்பமுடன் கூடி வந்தோமே
F#m                C#
தேவா பிரசன்னம் தாருமே
Bm        C#             F#m
தேடி உம்பாதம் தொழுகிறோம்
.
F#m         A       F#m     Bm
சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம்
E                    D      A
சாந்த சொரூபி என் இயேசுவே
F#m                C#
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
D       C#          D  F#m      
ஆண்டவரைத் தொழுகிறோம்                - தேவா
.
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண் பாருமே                - தேவா
.
கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்                 - தேவா
.
கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே                - தேவா
.
நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளன் நீர் வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே                     - தேவா
.
எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே                  - தேவா