Original Key: E - 2/4
 
E                    A
எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன்
B               E
இயேசு தருகின்றார் எந்தன்
E                          F#m            
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
B          B7                     E
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா
.
E                           E7               A
பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
F#m                  A        B      E
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார்
.
வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்      -ஆன
.
சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவர்த்தம் கொண்டு மாற்றினார்     -ஆன  
.
தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்    -ஆன
.
இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்         -ஆன