D A
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
pasumaiyana pulveLiyil patukka vaippavarE
A7 D
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
amaithiyana thaNNIraNtai azhaiththus selpavarE
A
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
nOyillatha sukavazhvu enakku thanthavarE
A7 D
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
karampitiththu katanillamal nataththis selpavarE
A G
என் மேய்ப்பரே... நல் ஆயனே
en mEypparE... nal aayanE
D A7 D
எனக்கொன்றும் குறையில்லப்பா
enakkonRum kuRaiyillappa
D G
கரங்களாலே அணைத்துக் கொண்டு, சுமந்து செல்கிறீர்
karangkaLalE aNaiththuk koNtu sumanthu selkiRIr
A D
மறந்திடாமல் உணவு கொடுத்து, பெலன் தருகிறீர்
maRanthitamal uNavu kotuththu pelan tharukiRIr
D G
மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
maraNa iruL paLLaththakkil natakka nErnthalum
A D
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல
appa nIngka iruppathalE enakku payamilla
D G
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
jIvanuLLa natkaLellam nanmai thotarumE
A D
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே
thEvan vIttil thinam thinam thangki makizhvEnE
D G
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
puthiya uyir thinam thinam enakkuth tharukiRIr
A D
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்
um peyarukkERpa parisuththamay nataththi selkiRIr
D G
எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
enathu uLLam apishEkaththal nirampi vazhiyuthE
A D
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே
ella naLum nanRip patal pati makizhuthE
D G
எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
ethirikaLin kaN munnE virunthu tharukinRIr
A D
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்
enathu thalaiyil naRumaNath thailam pUsukiRIr