C G C
காலமே தேவனை தேடு – ஜீவ
kalamE thEvanai thEtu jIva
F C G
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
karuNyar patham paNinthu manRatu
C Am G
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு
sIlamutan patham patik koNtatu
Dm G C
சீரான நித்திய ஜீவனை நாடு
sIrana niththiya jIvanai natu
C G C
மன்னுயிர்க்காய் மரித்தாரே-மனு
mannuyirkkay mariththarE-manu
F C G
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
mainthanena namam vaiththiruntharE
C Am G
உன் சிருஷ்டிகரை நீ இதயத்திலெண்ணு
un sirushtikarai nI ithayaththileNNu
Dm G C
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
uLLangkaninthu thani jepam paNNu
...காலமே
...kalamE
C G C
பாவ சோதனைகளை வெல்லு – கெட்ட
pava sOthanaikaLai vellu ketta
F C G
கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ketta parutal pEyutan pOrukku nillu
C Am G
ஜீவ கிரீடம் சிரத்திலணிய
jIva kirItam siraththilaNiya
Dm G C
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய
sinthanai sey manuvElanaip paNiya
...காலமே
...kalamE
C G C
சிறுவர்கள் என்னிடம் சேர – தடை
siRuvarkaL ennitam sEra thatai
F C G
செய்யா திருங்களென்றார் மனதார
seyya thirungkaLenRar manathara
C Am G
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
paralOka selva mavarkkup palikkum
Dm G C
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
pakkiyamellam paranthu jolikkum
...காலமே
...kalamE
C G C
வேலையுனக்கு கை கூட – சத்ய
vElaiyunakku kai kUta sathya
F C G
வேதன் கிருபை வரத்தை மன்றாட
vEthan kirupai varaththai manRata
C Am G
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
kalai thEtuvOr enaik kaNtataivarE
Dm G C
கண் விழித்து ஜெபம் செய்யுமென்றாரே
kaN vizhiththu jepam seyyumenRarE
...காலமே
...kalamE