E                                  B   
சரணம் சரணம் அனந்தா சச்சினாந்தா 
saraNam saraNam anantha sassinantha 
F#m            A             B        E
தாவீதின் மைந்தா ஓசன்னா சரணபதந்தா
thavIthin maintha oosanna saraNapathantha
E
பித்தன் என்று வெள்ளை
piththan enRu veLLai
E                    B
அரைச்சட்டை அணிந்து –
araissattai aNinthu 
F#m           A        B            E     
பேஜக ஏரோதே பரி காசம் பண்ணினான்
pEjaka eerOthE pari kasam paNNinan
   ...சரணம்
   ...saraNam
E                                    B
கற்றூணில் சேர்ந்திறுகக் கட்டி வலுவாய்
kaRRUNil sErnthiRukak katti valuvay
F#             A
காவலன் தன் சேர்வை
kavalan than sErvai
          B          E
எல்லாம் கூடி அளித்தார்
ellam kUti aLiththar
   ...சரணம்
   ...saraNam
E
முள்ளின் முடி செய்தழுத்தி
muLLin muti seythazhuththi
E             B     F#m        A
வள்ளல் எனவே – மூர்க்கமுடனே
vaLLal enavE  mUrkkamutanE
A          B             E
தடிகொண்டார்க்க அடித்தார்
thatikoNtarkka atiththar
   ...சரணம்
   ...saraNam
E
கையினில் செங்கோலதென்று
kaiyinil sengkOlathenRu
E                 B    F#m
மூங்கில் ஒன்றிட்டு – காவலன் நீ
mUngkil onRittu  kavalan nI
A              B                 E
யூதருக்கென் றோவியஞ் சொன்னார்
yUtharukken ROviyany sonnar
   ...சரணம்
   ...saraNam
E                                 B
துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய்
thuppinar mukaththinil athikkiramamay
F#m             A
துன்னிய கைக்கோலை வாங்கி
thunniya kaikkOlai vangki
B                  E
சென்னியில் போட்டார்
senniyil pOttar
   ...சரணம்
   ...saraNam
E                  
முழங்காலிலே இருந்து தெண்டன்
muzhangkalilE irunthu theNtan
E        B     F#m            A
பண்ணியே – முன்னவனைத் தான் 
paNNiyE  munnavanaith than 
A            B              E
இறைஞ்சிக் கன்னத் தறைந்தார்
iRainysik kannath thaRainthar
   ...சரணம்
   ...saraNam





 
 